இந்தியா

'செய்திகளைப் பார்த்து வருத்தமடைந்தோம்': சுவேதாவின் குடும்பத்தினர்

DIN


சென்னை: தாம்பரம் ரயில் நிலையம் அருகே, கல்லூரி மாணவி சுவேதா கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது, அவர் வசித்து வந்த பகுதி மக்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அவள் கொலை செய்யப்பட்டதால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருந்த குடும்பத்தினருக்கு, மேலும் வலிகளைத் தந்தது, சுவேதா குறித்து காட்சி ஊடகங்களில் வெளியான செய்திகள் என்று கூறுகிறார் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி.

கொலையில் ஈடுபட்ட குற்றவாளியை, சுவேதா காதலித்து ஏமாற்றிவிட்டதாக சில காட்சி ஊடகங்களில் நேற்று செய்தி வெளியானதால், கொலை செய்யப்பட்டவரையே குற்றம்சாட்டுவதா என்று அவர்கள் வேதனையோடு கேட்பதாகக் கூறுகிறார்.

அதேவேளையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குற்றவாளி ராமச்சந்திரனைப் பார்க்க வந்த அவரது தந்தை, மருத்துவமனை என்றும் பாராமல் தனது மகனை அடிக்க முயன்றார். 

கொலைச் சம்பவம் குறித்து ராமச்சந்திரன் கூறுகையில், தன்னுடனான காதலை மறுத்ததால், சுவேதா முன்னிலையில், கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளவே கத்தியை வாங்கி வந்ததாகவும், ஆனால், சுவேதாவுடன் நடந்த வாக்குவாதத்தில், ஆத்திரம் அடைந்து அவரை குத்திக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை, சுவேதாவின் உடலை உடற்கூராய்வுக்குப் பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குரோம்பேட்டையில் சுவேதாவின் வீடு அமைந்திருந்த பகுதி மக்கள் பலரும் சுவேதாவின் வீட்டு வாசலில் குவிந்திருந்தனர். தங்களது துயரங்களை சொல்லிச் சொல்லி மாய்ந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT