இந்தியா

மகாராஷ்டிரத்தில் அக்.22 முதல் திரையரங்குகள் திறப்பு

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் அடுத்த மாதம் 22ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மாநில அரசு சனிக்கிழமை அறிவித்தது.

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக மக்கள் கூடும் இடங்கள் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி கரோனா பரவலைத் தடுக்க திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி அக்டோபர் 22ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமை அக்டோபர் 7ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் கோயில்கள் திறக்க அனுமதியளித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT