உத்தரப்பிரதேசத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்வு
உத்தரப்பிரதேசத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
கடந்த அக். 25 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பணியாற்றி வந்த இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பின் அடுத்தடுத்து அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ததில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அம்மாநிலத்தில் டெங்கு பாதிப்புகள் ஒருபுறம் அதிகரித்துவரும் நிலையில் தற்போது ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
Advertisement
இதையும் படிக்க | அபாயகரமான அளவை எட்டிய தில்லி காற்று மாசு
இந்நிலையில் கான்பூர் பகுதியில் புதிதாக 30க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 45 ஆண்களும், 21 பெண்களும் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.