மேஜைக்கு ஒரு மாணவர்: மேற்கு வங்கத்தில் பள்ளிகள் திறப்பு
மேற்குவங்கத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
மேற்குவங்கத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 20 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும், பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே தலைநகரான கொல்கத்தாவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை புரிந்தனர். சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 8,865 பேருக்கு தொற்று: 287 பேர் பலி
பள்ளி வாயில்களில் பள்ளி மாணவர்களுக்காக கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு மேஜைக்கு ஒரு மாணவர் மட்டுமே அமரவைக்கப்படுகின்றனர். இரு பிரிவுகளாக வகுப்பு மாணவர்கள் பிரிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன.