வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா 
இந்தியா

நேபாள பிரதமருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

DIN

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷர்மா ஓலி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமராக பதவியேற்றுள்ள  ஷோ் பகதூா் தாபா இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். 

நேபாளத்தில் புதிதாக பதவியேற்றுள்ள ஷோ் பகதூா் தேவுபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததன் பேரில் அவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

அதன்படி, முதல் நாள் பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று தில்லியில் சந்தித்தார். 

இரண்டாம் நாள் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அரசுமுறை நிகழ்ச்சிகள் தவிர, பிரதமா் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசிக்கும் நேபாள பிரதமா் செல்லவுள்ளாா்.

இந்த சந்திப்பில் நேபாளம் - இந்தியா இடையேயான வணிகம், நட்புறவு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் தேதி நேபாளம் திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக்கொலை: 2 பேர் கைது

Parasakthi review - தமிழ்த் தீ பரவியதா? | Sivakarthikeyan | Ravi Mohan | Sri Leele

வானில் பறக்கவிடப்பட்ட டூம்ஸ்டே விமானம்! அமெரிக்காவில் போர்ப் பதற்றமா?

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

SCROLL FOR NEXT