முகப்பு
இந்தியா

அசாமில் இரு உக்ரைனியர்கள் கைது

அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்பூரில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இரண்டு உக்ரைனியர்களை ரயில்வே

Updated On : 22 ஏப்ரல், 2022 at 4:44 PM
கோப்புப்படம்
பகிர்:

சில்சார்: அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்பூரில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இரண்டு உக்ரைனியர்களை ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

வியாழன் இரவு அகர்தலா-புதுதில்லி (ஆனந்த் விஹார்) திரிபுரா சுந்தரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது ரயில்வே காவலர்கள் கிறிசின்ஸ்கி வோலோடிமிர்(39) மற்றும் நசாரி வோஸ்னியுக்(21) ஆகியோரை கைது செய்தனர்.

உக்ரைனியர்கள் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்ததாக ரயில்வே காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர், ரயில்வே காவல்துறையினர் கைதானவர்களை கரீம்கஞ்ச் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.