இந்தியா

பம்பையில் வெள்ளம்: சபரிமலைக்குச் செல்ல தற்காலிகமாக தடை!

DIN

கேரள மாநிலம் பம்பை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலைக்குச் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் அங்கு பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  

பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் ஆற்றில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் யாரும் மலையேறக்கூடாது என்றும் மாலை 6 மணிக்குள் சன்னிதானத்தில் இருப்பவர்கள் கீழே இறங்கிவிட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

நிறை புத்தரிசி நிகழ்ச்சிக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT