இந்தியா

2.5 ஆண்டுகளில் வேலைக்காக வெளிநாடு சென்ற 28 லட்சம் இந்தியர்கள்

DIN


புது தில்லி: கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான இரண்டரை ஆண்டு காலத்தில் வேலைக்காக 28 லட்சம் பேர் வெளிநாடு சென்றிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியுரிமை சோதனை அவசியமான நாடுகளுக்கு மட்டும் சுமார் 4.16 லட்சம் இந்தியர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றச் சென்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவு விவகாரத் துறை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பணி அல்லது வேலை கிடைத்து வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையை அறிய குறிப்பிட்டுச் சொல்லும் எந்த தொழில்நுட்பமும் இப்போது இல்லை. வெளிநாடு செல்லும் இந்தியர்கள், தங்கள் விமான பயணத்தின் போது வாய்மொழியாகக் கூறும் தகவல் மூலமாகவே இந்த விவரம் தொகுக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2020ஆம் ஆண்டு 7.15 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். இது 2021ஆம் ஆண்டு 8.33 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், இந்த ஆண்டு  ஜூலை மாதம் வரை 13.02 லட்சம் பேர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் கூறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT