இந்தியா

சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். 

DIN

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். 

நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து பிற எம்.பி.க்கள் வாக்களித்து வருகின்றனர். 

இதையடுத்து, முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெற்று வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்திற்கு சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். 

சமீபத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று நடைபெறும் குடியரசு துணைத் தலைவா் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) போட்டியிடுகின்றனர். 

வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். பின்னா், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். 

இதில் மக்களவை உறுப்பினர்கள் 543, மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT