இந்தியா

குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி வெற்றி!

DIN

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தலித் செயல்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி, வத்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். 

2017ஆம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நிலையில், இம்முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரை ஆதரிக்கும் வகையில் 

41 வயதான ஜிக்னேஷ், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் என்ற அமைப்பின் மூலம் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். 

முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள வத்கம் தொகுதியில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் 90,000 முஸ்லீம் ஓட்டுகள் உள்ளன. 44,000 பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஓட்டுகளும், 15,000 ராஜ்புட் வகுப்பைச் சேர்ந்த ஓட்டுகளும் உள்ளன. 

இதில், பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார். 

182 தொகுதிகளுடைய குஜராத்தில், 150க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றவுள்ளது. 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 149 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT