இந்தியா

கோவாவில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திறப்பு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) கோவா மற்றும் மகாராஷ்டிரத்துக்கு செல்கிறார்.

DIN

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திறப்பு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) கோவா மற்றும் மகாராஷ்டிரத்துக்கு செல்கிறார்.

மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். மேலும், நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் அவர் தொடக்கி வைக்க உள்ளார். அதன்பின் எய்ம்ஸ் மருத்துவமனையையும் திறந்து வைக்க உள்ளார்.

கோவா மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மோப்பா சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

இந்த மோப்பா விமான நிலையம் வடக்கு கோவாவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் ரூ.2,870 கோடியில் உருவாகியுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு இந்த விமான நிலையத்தின் மூலம் 44 லட்சம் பயணிகள் பயனடைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT