தவறாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு: நீதிமன்றத்தில் அஃப்தாப் தகவல் 
இந்தியா

தவறாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு: நீதிமன்றத்தில் அஃப்தாப் தகவல்

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஃப்தாப் பூனாவாலா, தனது ஜாமீன் மனு தவறுதலாகத் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

DIN

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்துவாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஃப்தாப் பூனாவாலா, தனது ஜாமீன் மனு தவறுதலாகத் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தில்லி நீதிமன்றத்தில் தனது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கான அனுமதியை வழக்குரைஞருக்கு மறுத்துவிட்டதாகவும் அஃப்தாப் குறிப்பிட்டுள்ளார்.

தில்லி நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி பிருந்தாகுமாரி, வழக்கு விசாரணையின்போது, அஃப்தாப்பிடமிருந்து ஜாமீன் மனு தவறுதலாக தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

பிறகு, குற்றவாளியிடம் காணொலி வாயிலாக பேச வேண்டும் என்று கூறியிருந்ததால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பிறகு, காணொலி வாயிலாக அஃப்தாப் பேசுகையில், தான் ஒரு வாக்காலத் நாமாவில் கையெழுத்திட்டுக் கொடுத்ததாகவும், ஆனால், அது ஜாமீன் மனு என்று தனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில், ஜாமீன் மனுவை நிலுவையில் வைக்க வேண்டுமா என்று நீதிபதி கேட்டதற்கு, எனது வழக்குரைஞரிடம் பேசி, விரைவில் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன் என்று பதிலளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.7,200 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

விஜய் ஆண்டனி தயாரிக்கும் பூக்கி படத்தின் முதல் பாடல்!

“செங்கோட்டையன் வெளியேறியிருப்பது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் பின்னடைவு!” திருமா பேட்டி

சத்தீஸ்கரில் 41 மாவோயிஸ்டுகள் சரண்!

1971-க்குப் பின்.. முதல் முறையாக இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை!

SCROLL FOR NEXT