இந்தியா

எதிர்மறை அரசியலில் ஈடுபடவில்லை, மக்களின் பிரச்னையை எழுப்புகிறது: பைலட்

DIN

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தில் எதிர்மறை அரசியலில் ஈடுபடவில்லை என்றும் மக்களின் பிரச்னைகளை எழுப்புகிறோம் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ராஜஸ்தானின், அலிகாரில் உரையாற்றிய பைலட் கூறுகையில், 

ஒற்றுமை நடைப்பயணம் மாநிலத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. 

வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமூகத்தில் ஏற்படும் பிளவுகள் மற்றும் நிறுவனங்கள் அழிக்கப்படுவது போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த அணிவகுப்பு எழுப்பியுள்ளது. 

மேலும், ஒற்றுமை நடைப்பயணத்தில் யாரும் எதிர்மறையான பிரச்னைகளை எழுப்பவில்லை, அன்பு, நல்லிணக்கம், நமது கலாசார பாரம்பரியம் மற்றும் மக்களை ஒன்றிணைப்பது பற்றி மட்டுமே பேசப்படுவதாக அவர் கூறினார். 

இந்த நடைப்பயணத்தை எப்படித் தாக்குவது மற்றும் விமர்சிப்பது என்று தெரியாமல் பலர் வருத்தத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் ரோந்து பணிக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரா? வைரல் விடியோ!

ராமர் கோயில் தீர்ப்பை மாற்ற முடியாது: பிரதமர் மோடி

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

ஆஹா... ஞாயிறு!

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

SCROLL FOR NEXT