இந்தியா

சீனாவுக்குத் திரும்புவதில் எந்தப் பயனும் இல்லை: தலாய் லாமா

DIN

இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன், சீனாவுக்குத் திரும்புவதில் எந்த பயனும் இல்லை என்று திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். 

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய - சீனப்படை மோதல் நிலவி வருகிறது. கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.

மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. 

இந்நிலையில் இதுகுறித்து திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா, '

தற்போது நிலைமை மேம்பாட்டு வருகிறது. சீனாவுக்கு வளைந்துகொடுக்கும் தன்மை உண்டு. ஆனால் நான் சீனாவுக்குத் திரும்புவதில் அர்த்தமில்லை. நான் இந்தியாவை விரும்புகிறேன். அதுதான் என்இடம். காங்க்ரா - நேருவின் விருப்பம். இது எனது நிரந்தர குடியிருப்பு' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

SCROLL FOR NEXT