இந்தியா

மீண்டும் கரோனா அச்சுறுத்தல்: அவசர ஆலோசனைக்கு முதல்வர் கேஜரிவால் அழைப்பு!

DIN

சீனாவில் புதிய வகை ஓமைக்ரான் வைகை கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

சீனாவில் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனிடையே பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற புதிய வகை ஒமைக்ரான் திரிபு வகை தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா குஜராத் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முக்கிய ஆலோசனை நடத்திய பின்னர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு மாதிரிகளை மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய பிஎஃப் 7 மற்றும்  பிஎஃப் 12 புதிய வகை ஓமைக்ரான் பரவல் எதிரொலியாக அவசர ஆலோசனை நடத்துவதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

வியாழக்கிழமை நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, மூத்த அதிகாரிகள், மருந்துவ நிபுணர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்தில், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT