முகப்பு
இந்தியா

இந்தியாவுக்கு மேலும் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்படும்: மத்திய வனத்துறை அமைச்சகம்

நமீபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்படும் என மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:10 AM
பகிர்:

நமீபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்படும் என மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிறுத்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் கொண்டு வரப்பட்டன. அந்த சிறுத்தைகளை மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்த நாளில் திறந்து விட்டார். 

மத்திய பிரதேசத்தின் குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் இந்தச் சிறுத்தைப் புலிகளுக்காக 10 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் சிறப்புப் பகுதி ஏற்படுத்தப்பட்டது. நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அவை திறந்து விடப்பட்டன. சில நாட்களுக்குப் பிறகு அந்த சிறுத்தைகள் வேட்டையாடி தங்களது இரையை எடுத்துக் கொள்ளவும் செய்தன.

இந்த நிலையில், நமீபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்படும் என மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வனத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: நமீபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்பட உள்ளன. ஏற்கனவே, கொண்டுவரப்பட்ட சிறுத்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.