இந்தியா

ஒற்றுமை நடைப்பயணத்தில் கமல்ஹாசனுடன் கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள்

DIN

ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகர் கமல்ஹாசன் மட்டுமின்றி சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் ஹரியாணாவில் நடைபெற்று வருகிறது. இந்த நடைப்பயணத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் இன்று (டிசம்பர் 23) கலந்து கொண்டனர். இந்த நடைப்பயணம் இன்று ஹரியாணாவில் இருந்து தில்லிக்குள் நுழைய உள்ளது. இந்த நடைப்பயணத்தில் தில்லியில் ராகுல் காந்தியுடன் நடிகரும் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொள்வார் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகர் கமல்ஹாசன் மட்டுமின்றி சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தில்லி காங்கிரஸ் தலைவர் அனில் சௌத்ரி கூறியதாவது: தலைநகர் தில்லியில் நடைபெறவுள்ள ஒற்றுமை நடைப்பயணத்தில் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒற்றுமைப் பயணம் தற்போது ஹரியாணாவில் நடைபெற்று வருகிறது. தில்லியில் நடைபெற உள்ள ஒற்றுமைப் பயணத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளனர் என்றார். 

முன்னதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ராகுல் காந்தியால் தில்லியில் நடைபெறும் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்கே ஹெலிகாப்டரில் சோதனை எதிா்க்கட்சிகளைத் தோ்தல் ஆணையம் குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

மாணவ-மாணவியருக்கு பாராட்டு...

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநா் ரவி ஒப்புதல்

இந்திய நிதியுதவித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்: மாலத்தீவு வெளியுறவு அமைச்சா்

சவீதா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான உச்சி மாநாடு

SCROLL FOR NEXT