இந்தியா

அம்மாவின் அன்பை நாட்டுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்: ராகுல் காந்தி

DIN

தில்லியில் நடைபெற்று வரும் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். 

ராகுல் காந்தி தலைமையிலான் பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி தற்போது தலைநகர் தில்லியை சென்றடைந்துள்ளது. ராகுலின் இந்த நடைப்பயணத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். நேற்று (டிசம்பர் 23) ஹரியாணாவில் நடைபெற்ற ஒற்றுமைப் பயணத்தில் திமுக எம்.பி., கனிமொழி கலந்து கொண்டார். இன்று ( டிசம்பர் 24) மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ராகுலுடன் நடைப்பயணத்தில் இணைந்தார்.

இந்த நிலையில், ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். சோனியா காந்தியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சிறிது தூரம் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர். கடந்த செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கிய நடைப்பயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இரண்டாவது முறையாக கலந்து கொள்கிறார். முன்னதாக, கடந்த அக்டோபர் மாதத்தில் கர்நாடகத்தின் மாண்டியாவில் நடைபெற்ற ஒற்றுமைப் பயணத்தில் அவர் பங்கேற்றிருந்தார். இருப்பினும், காந்தி குடும்பம் முழுவதும் ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த நடைப்பயணத்தில் சோனியா காந்தி முகக் கவசம் அணிந்து கொண்டு ராகுல் காந்தியின் அருகில் நடந்து வந்தார். அவருடன் அவரது மகள் பிரியங்கா காந்தி, மருமகன் ராபர்ட் வதேரா மற்றும் அவரது பேரக்குழந்தைகள் நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: எனது அம்மாவிடம் இருந்து பெரும் அன்பினை என்னுடைய நாட்டுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT