ராகுல் காந்தி 
இந்தியா

‘இது அம்பானி, அதானிகளின் அரசு’: மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

மத்திய அரசு அதானி, அம்பானிகளுக்கான அரசாக இருப்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

DIN

மத்திய அரசு அதானி, அம்பானிகளுக்கான அரசாக இருப்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்திய ஒற்றுமைப் நடைபயணம் பல்வேறு மாநிலங்களின் வழியாகப் பயணித்து தற்போது நாட்டின் தலைநகரான தில்லியை அடைந்துள்ளது. 

100 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த நடைபயணத்தில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு காங்கிரஸின் இந்த நடைபயணத்திற்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். 

இந்நிலையில் தில்லியில் நடைபயணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி நாட்டின் நடப்பது அம்பானி, அதானி ஆட்சி என கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்தார். 

பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இது நரேந்திர மோடியின் அரசு கிடையாது. இது அதானி, அம்பானிகளின் அரசு. உண்மையான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்ப இந்துக்கள், இஸ்லாமியர்கள் என பிரிவினை விதைக்கப்படுகிறது. பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலையில்லாமல் பக்கோடா விற்றுக் கொண்டிருக்கின்றனர்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஒற்றுமை நடைபயணத்தில் வன்முறை இல்லை. நான் அரசியலுக்கு 2004ல் வந்த போது எங்கள் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது ஊடகங்கள் என்னை வாழ்த்தின. அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் நிலப்பிரச்னையை எழுப்பியபோது அவைகள் எனக்கு எதிராகத் திரும்பின” என அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாரோ... யார் யாரோ... அனைரா குப்தா!

மக்களவையில் அமளிக்கிடையே 3 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா!

வெண்புறா... ஜான்வி கபூர்!

உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்: மிதாலி ராஜ்

சுதந்திர நாள் விடுமுறை: கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT