இந்தியா

இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 98.8% உயர்வு! 

DIN


புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 188  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 141 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 188 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.8 சதவீதமாக உள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,468 ஆக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 220 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT