முகப்பு
இந்தியா

பாஜகவின் விமர்சனம் எங்களை மேலும் வலிமையாக்குகிறது: ராகுல்

பாஜகவும், ஆர்எஸ்எஸ் கூறும் விமர்சனத்தை வரவேற்பதாகவும், ஒருவகையில் அவர்கள் எனக்கு குரு என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Updated On : 31 டிசம்பர், 2022 at 4:25 PM
பாஜகவின் விமர்சனம் எங்களை மேலும் வலிமையாக்குகிறது: ராகுல்
பகிர்:

பாஜகவும், ஆர்எஸ்எஸ் கூறும் விமர்சனத்தை வரவேற்பதாகவும், ஒருவகையில் அவர்கள் எனக்கு குரு என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

கடந்த செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தனது பயணத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி. இந்த பயணம் காஷ்மீர் வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

100 நாள்களை கடந்துள்ள இந்த பயணம் தற்போது தில்லியில் நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு காரணமாக டிச.25 முதல் ஐன.2 வரை இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் கூறுகையில், 

ஒற்றுமை நடைப்பயணம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பயணத்தைத் தடுக்க பலரும் பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர். அதிலும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பல விமர்சனத்தை முன்வைத்து நடைப்பயணத்தை தடுத்துநிறுத்த முயன்றனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை. அதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாஜக, ஆர்எஸ்எஸ்  செய்யும் விமர்சனத்தை நான் வரவேற்கிறேன். அவர்கள் எங்களை மேலும் வலிமையாக்குகிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். 

பாஜக இன்னும் எங்களை அதிகமாக விமர்சிக்க வேண்டும். ஒருவிதத்தில் அவர்களை நான் குருவாக கருதுகிறேன். அவர்கள் எனக்கு வழி காட்டுகிறார்கள். என்ன செய்யக்கூடாது என்பதை எனக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். 

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2024-ல் பாஜக வெற்றிபெறுவது கடினமாக இருக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன் எதிர்க்கட்சிகள் களத்தில் திறம்பட நின்று பாஜகவை எதிர்த்துச் செயல்பட வேண்டும் என்றார். 

மேலும், தனது கவனம் முழுவதும் ஒன்றுபட்ட இந்தியாவுக்காக உழைப்பதும், இந்தியாவை ஒன்றிணைப்பதில் மட்டுமே உள்ளது. இந்தியா நல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணும் கட்சிகள் பல இருக்கின்றன. ஒற்றுமை நடைப்பயணத்தின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்துள்ளன. எங்கள் பயணத்தில் இணையவரும் யாரையும் நாங்கள் தடுப்பதில்லை. அகிலேஷ், மாயாவதி உள்ளிட்டவர்கள் நாட்டில் நல்லிணக்கத்தை விரும்புவதாகவும், அவர்களுடன் கொள்கை ரீதியாக எங்களுடன் நல்ல உறவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

அன்பு, பாசம், தேசத்தின் மீதுள்ள வெறுப்பை போக்குவதுதான் ஒற்றுமை நடைப்பயணத்தில் முக்கிய அடித்தளம் என்று அவர் கூறினார். 

ஒற்றுமை நடைப்பயணம் ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கி உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து பின்னர் ஹரியாணா, பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்குச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.