இந்தியா

தில்லியில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுடன் கலந்துரையாடிய துணை முதல்வர்

தில்லியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

DIN

தில்லியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய வழிகாட்டுதலின்படி, 50 சதவீத மாணவர்களுடனும், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தில்லி சர்வோதயா கன்யா வித்யாலயாவில் 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆன்லைன் வகுப்புகள் மாற்றுவழி தான். நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்க நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம். மாணவர்களுடன் கலந்துரையாடுகையில், நேரடி வகுப்புகள் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் நேரடி கலந்துரையாடல் என்பது மிகவும் அவசியம். 

மேலும், 95 சதவீதத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், 50 சதவீத தனியார் பள்ளி மாணவர்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி  செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிகளில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று வரையறை இல்லை. ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 

பள்ளி மாணவர்கள் அனைவரும், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அவர் கூறினார்.

ஐந்து சதவீதத்திற்கும் குறைவான கரோனா தொற்று உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி யோசிக்கலாம், ஆனால் இது தொடர்பாக மாநில அரசுகள்தான் அழைப்பு விடுக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT