இந்தியா

ஆந்திரத்தில் கார் மீது லாரி மோதல்: 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

ஆந்திரத்தில் கார் மீது லாரி மோதியதில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியானார்கள். 

DIN

ஆந்திரத்தில் கார் மீது லாரி மோதியதில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியானார்கள். 
ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே நேற்று கார் மீது லாரி மோதி. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து உருவகொண்டா காவல் துணை ஆய்வாளர் வெங்கட சுவாமி கூறுகையில், காரில் ஓட்டுநர் உள்பட மொத்தம் 9 பேர் காரில் பயணம் செய்தனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. காரில் அனைவரும் நிம்மகல்லுவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 
அப்போது அதிவேகமாக சென்ற லாரி எதிர் திசையில் வந்த கார் மீது மோதியது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT