இந்தியா

வாகனமோ, தொலைபேசியோ இல்லாத காவல்நிலையங்களா? அதுவும் இத்தனையா?

DIN

நகரங்களில், வீட்டுக்கு 2 வண்டி, 4 செல்லிடப்பேசி இருக்கும் நிலையில், நாட்டில் வாகன வசதி, தொலைபேசி வசதியோ இல்லாத காவல்நிலையங்கள் இன்னமும் நூற்றுக்கணக்கில் இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு -  காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகள் எத்தனை பதற்றமானவை என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், அந்த மாநிலங்களில் சுமார் 148 காவல்நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை என்பதும், அதிலும் 53 காவல்நிலையங்களில் கைப்பேசிகளோ, செல்லிடப்பேசி வசதியோ இல்லை. நக்ஸல் அதிகம் அதிகம் உள்ள ஆந்திரத்தில மட்டும் 135 காவல்நிலையங்களில் வாகன வசதியே கிடையாது.

நாடு முழுவதும், சரியாக 257 காவல்நிலையங்களில் வாகன வசதி கிடையாது, அதுபோல, 638 காவல்நிலையங்களில் தொலைபேசி வசதியோ, 143 காவல்நிலையங்களில் கைப்பேசி வசதியோ செல்லிடப்பேசி வசதியோ இல்லை என்கிறது 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியின் புள்ளிவிவரம்.

அதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த காவல்நிலையங்கள் அமைந்திருக்கும் பெரும்பாலான மாநிலங்கள், 2018 - 19ஆம் ஆண்டில், காவல்துறை நவீனமயமாக்கியதற்காக மத்திய அரசின் விருதுகளை வாங்கிக் குவித்திருப்பதாக மத்திய உள்விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடயாளுமன்ற உறுப்பினருமான ஆனந்த் ஷர்மா, உடனடியாக காவல்நிலையங்களில், தொலைபேசி வசதியும் வாகன வசதியும் செய்து கொடுக்குமாறு மத்திய உள்விவகாரத் துறையை வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT