மேக்கேதாட்டு நடைப்பயணம் பிப் 27ஆம் தேதி மீண்டும் தொடங்கும்: காங்கிரஸ் எம்.பி.
மேக்கேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸின் இரண்டாம் கட்ட பிப்ரவரி 27 ஆம் தேதி ராமநகரில் மீண்டும் தொடங்கும் என்று அக்கட்சி எம்பி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேக்கேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸின் இரண்டாம் கட்ட பிப்ரவரி 27 ஆம் தேதி ராமநகரில் மீண்டும் தொடங்கும் என்று அக்கட்சி எம்பி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பெங்களூருக்கு குடிநீா் வழங்குவதற்காக காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்ட வலியுறுத்தி, ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் உள்ள மேக்கேதாட்டு பகுதியில் இருந்து ஜன. 9-ஆம் தேதி ‘நமது நீா், நமது உரிமை’ என்ற முழக்கத்துடன் ‘நீருக்காக நடைப்பயணம்’ என்ற பெயரில் நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சி அண்மையில் மேற்கொண்டது.
இதையும் படிக்க- தாமரையில்தான் லட்சுமி வீட்டுக்கு வரும்: ராஜ்நாத் சிங்
4 நாட்கள் நடைபெற்ற இந்த நடைப்பயணம் கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மேக்கேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் பிப்ரவரி 27 ஆம் தேதி ராமநகரில் மீண்டும் தொடங்கும் என்று அக்கட்சி எம்பி சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கெங்கலில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், பெங்களூருவில் ஐந்து நாள் நடைப்பயணம் செல்ல முடிவு செய்துள்ளோம்.
ஆனால் மாநில பட்ஜெட் காரணமாக மூன்று நாள்கள் மட்டுமே நடைப்பயணம் மேற்கொள்ளப்படும். முதல் நாள் நடைப்பயணம் ராமநகரத்திலிருந்து பிடாதி வரையும், இரண்டாவது நாள் பிடாடியிலிருந்து கெங்கேரி வரையும் நடைபெறும். இதில் சித்தராமையா, மல்லிகார்ஜுனா கார்கே, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மாநிலத் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.