இந்தியா

மோசமான உடல்நிலையில் லாலு பிரசாத் யாதவ்: மருத்துவமனை

DIN

பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிகாரில் கால்நடைத் தீவன ஊழல் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 5-ஆவது வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாதுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை  சிபிஐ உயர்நீதிமன்றம் நேற்று(பிப்.21) விதித்தது.

முன்னதாக , ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் லாலுவின் ரத்த அளவு காலை 70 ஆக இருக்கிறது.  மாலை 240 ஆக உயர்ந்து விடுகிறது. ரத்த அழுத்தமும் 130 முதல் 160 வரை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. மேலும்,  சிறுநீரகம் வெறும் 20 சதவீத திறனுடன் இயங்கி வருவதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

5 ஆண்டுகள் சிறைத் தண்டனையால் கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஒட்டுமொத்தமாக அவருக்கான சிறைத் தண்டனை 19 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT