இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 1,525 ஆக அதிகரிப்பு
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு பற்றிய தரவுகளை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. நாட்டில் புதிதாக 27,553 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,525 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 27,553 பேருக்கு கரோனா
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 460 பேருக்கும், தில்லியில் 351 பேருக்கும் ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 117 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 74 பேர் குணமடைந்துவிட்டனர்.
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 560 பேர் குணமடைந்துவிட்டனர்.