முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 1,892ஆக உயர்வு

நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,892-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 4 ஜனவரி, 2022 at 4:31 PM
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 1,892ஆக உயர்வு
பகிர்:

நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,892-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களில் 766 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,126 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் குறித்த தரவுகளின் பட்டியலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில்  568 பேருக்கும், தில்லியில் 382 பேருக்கும், கேரளத்தில் 185 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக மணிப்பூர், லடாக், ஹிமாச்சல், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.