கோப்புப்படம் 
இந்தியா

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? வெளியான புதிய தகவல்

விமானி செய்த தவறினால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி, நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள், வீரா்கள் உள்பட 14 போ் சென்ற ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விபின் ராவத், மதுலிகா உள்பட 14 பேரும் உயிரிழந்தனா்.

இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. முப்படை தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஜனவரியில் விமானப்படைத் தளபதியிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இருப்பினும், இதுவரை ஹெலிகாப்டர் விபத்து விசாரணை அறிக்கை குறித்து விமான படை சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த விபத்தானது மனித தவறுனாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ ஏற்படவில்லை. 

கண்ட்ரோல்ட் பிளைட் இன்டூ தேரையின் (சிஐஎஃப்டி) காரணமாக, நிலப்பரப்பில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது.

அதாவது, விமானி எந்த தவறு செய்யவில்லை அதேபோல, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் விபத்து ஏற்படவில்லை. விபத்து நடந்த குன்னூர் பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வைத்திறன் குறைந்ததில் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில், விமானி செய்த தவறினால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

”பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்” - பகவந்த் மான்

ரவி ஒரு சகலகலா வல்லவன்! - சிவ ராஜ்குமார்

ஓராண்டை நிறைவு செய்த மூன்று முடிச்சு தொடர்!

ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!

SCROLL FOR NEXT