இந்தியா

உத்தரப் பிரதேசம்: இரவு ஊரடங்கு நேரம் நீட்டிப்பு

DIN

ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா எண்ணிக்கை 3000-யைத் தாண்டியதால் நாளை முதல் இரவு ஊரடங்கின் நேரம் நீட்டிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாளை(ஜன.6) முதல் இரவு நேர ஊரடங்கு அதிகரிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதையடுத்து, முன்னதாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இருந்த ஊரடங்கு இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என 2 மணி நேரம் அதிகமாக நீட்டிக்கப்பட உள்ளது.

மேலும், ஜன.6-லிருந்து 10-வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜன.14 ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில் 100 பேருக்கும் மேல் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT