மேக்கேதாட்டு விவகார காங்கிரஸ் பேரணி 
இந்தியா

மேக்கேதாட்டு விவகார காங்கிரஸ் பேரணி: 30 பேர் மீது வழக்கு

கரோனா கட்டுப்பாடுகளை மீறும் வகையில் பேரணியில் ஈடுபட்ட 30 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் உள்துறை அமைச்சர் அகர ஞானேந்திரா தெரிவித்துள்ளார். 

DIN


கரோனா கட்டுப்பாடுகளை மீறும் வகையில் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 30 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் உள்துறை அமைச்சர் அகர ஞானேந்திரா தெரிவித்துள்ளார். 

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேக்கேதாட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நடைப்பயணம் ஜனவரி 18-ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு 165 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அகர ஞானேந்திரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், கரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது ராமநகர மாவட்ட காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டத்தை மீறுபவர்கள் யாரையும் நாங்கள் விடுவதாயில்லை என்று கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT