இந்தியா

120 சிறப்பு மருத்துவர்களுடன் அமைச்சர் மாண்டவியா ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில சிறப்பு மருத்துவர்களுடனும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில சிறப்பு மருத்துவர்களுடனும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

நாடு முழுவதும் 120 சிறப்பு மருத்துவர்கள் இந்த காணொலியில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

நாடு முழுவதும் கரோனா மற்றும் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இன்று (ஜன.11) அனைத்து மாநில சிறப்பு மருத்துவர்களுடனும் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். 

இதில் கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகள், விழிப்புணர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன் பிறகு சுட்டுரையில் பதிவிட்டுள்ள அமைச்சர் மாண்டவியா, நாம் அனைவரும் இணைந்து கரோனாவை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1.68 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் கரோனா பாதித்தவர்களில் 277 பேர் பலியாகினர்.  

நாட்டில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,21,446 பேர் ஆக உள்ளது. நாள்தோறும் கரோனா பாதிப்பு உறுதியாகும் விகிதம் 10.64 சதவீதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT