இந்தியா

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா:  புதிதாக 2.6 லட்சம் பேருக்கு கரோனா; மேலும் 315 பேர் பலி

DIN

புது தில்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.6 லட்சத்துக்கும் அதிகமனோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,64,202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,65,82,129 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று மட்டும் 1,09,345 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,48,24,706 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 315 பேர் பலியாகியுள்ள நிலையில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,85,350 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 3,48,24,706 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 12,72,073 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதியதாக அதிகம் தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில், மகாராஷ்டிரத்தில் 46,406 பேர், தில்லி 28,867 பேர், கர்நாடகம் 25,005 பேர், தமிழ்நாடு  20,911 பேர்,  மேற்கு வங்கம் 23,467 பேர்,  உத்தரப் பிரதேசம் 14,765 பேர்,  கேரளத்தில் 13,468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை 1,55,39,81,819 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 73,08,669 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,753 ஆக அதிகரித்துள்ளது. தினசரி ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைய பாதிப்பை விட 4.83 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

SCROLL FOR NEXT