முகப்பு
இந்தியா

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது

நாட்டில் கரோனா பாதித்திருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 15 லட்சத்தைக் கடந்தது.

Updated On : 16 ஜனவரி, 2022 at 12:21 PM
கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது
பகிர்:


புது தில்லி: நாட்டில் கரோனா பாதித்திருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 15 லட்சத்தைக் கடந்தது.

நேற்று ஒரே நாளில் புதிதாக 2,71,202 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைக்கு முந்தைய நாளை விட 2,369  பேர் கூடுதலாகும். கரோனாவால் பாதித்த 314 பேர் நேற்று பலியாகினர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்திருந்த 1,38,331 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி 15,50,377 பேர் கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 16.28 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,743 ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.