கோப்புப்படம் 
இந்தியா

கோவா தேர்தல்: காங்கிரஸ் இல்லாமல் சிவசேனை - தேசியவாத காங். கூட்டணி

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், கோவா பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப். 14இல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸுடன் உடன்பாடு எட்டப்படவில்லை என புதன்கிழமை காலை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிவசேனையின் சஞ்சய் ரெளத் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ப்ரஃபூல் படேல் இணைந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கோவா தேர்தலில் இணைந்து போட்டியிட நாங்கள் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால், அது வீணானது. எங்களின் அழைப்புக்கு அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காததால், சிவசேனை தேசியவாத காங்கிரஸ் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

40 தொகுதிகளிலும் கணிசமான தொகுதிகளில் போட்டியிடவுள்ளோம். முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடவுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT