முகப்பு
இந்தியா

கட்டுப்பாடுகள் தளர்வு: தில்லி முதல்வரின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்!

தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரிய முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரிய முதல்வரின் பரிந்துரையை துணை நிலை ஆளுநர் நிராகரித்துள்ளார். 

கரோனா பரவல் காரணமாக தலைநகர் தில்லியில் இரவு நேர ஊரடங்கு, தனியார் நிறுவனங்கள் 100% வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், தற்போது தில்லியில் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, இரவு நேர ஊரடங்கை கைவிடுவதுடன் வார இறுதி நாள்களிலும் வணிக வளாகங்கள் திறக்கப்படவும் தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படவும்  கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். 

ஆனால், அந்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார். இரவு நேர ஊரடங்கு முடிவை நிராகரித்த ஆளுநர், தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 

நேற்று, தில்லியில் கரோனா பலி 43 ஆக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →