கோப்புப்படம் 
இந்தியா

அரசு அலுவலகங்களில் இனி அம்பேத்கர், பகத் சிங் படங்கள்: கேஜரிவால் அறிவிப்பு

தில்லி அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் தலைவர்களின் படங்கள் இனி இடம்பெறாது என்று முதல்வர் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

DIN

தில்லி அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் தலைவர்களின் படங்கள் இனி இடம்பெறாது என்று முதல்வர் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

தில்லியில் குடியரசு தின விழாவையொட்டி, தன்னுடைய அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் கேஜரிவால் பின்னர் உரையாற்றினார். 

அப்போது, தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறினார். மேலும், கரோனாவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து, முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, 'தில்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் இனி முதல்வர், அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறாது. அதற்குப் பதிலாக, டாக்டர் அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்கள் இடம்பெறும்.

அவர்களின் கனவான முற்போக்கு மற்றும் வளமான இந்தியாவை நோக்கி உழைக்க இது நம் அனைவரையும் ஊக்குவிக்கும்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT