முகப்பு
இந்தியா

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் கொலை

ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
கோப்புப்படம்
பகிர்:


ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

"புல்வாமா மற்றும் புட்காம் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தெற்கு காஷ்மீரின் புல்வாமாவிலுள்ள நைரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

புல்வாமாவில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்."

காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் ஸாகித் வானி உள்பட 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது பாதுகாப்புப் படைகளின் பெரிய வெற்றி என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.