பெண்ணின் வயிற்றிலிருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: அதிர்ந்த மருத்துவர்கள் 
இந்தியா

பெண்ணின் வயிற்றிலிருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: அதிர்ந்த மருத்துவர்கள்

கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்த பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 15 கிலோ எடைகொண்ட கட்டியை பாட்னாவில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் வெட்டி அகற்றியுள்ளனர்.

DIN

பாட்னா: கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்த பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 15 கிலோ எடைகொண்ட கட்டியை பாட்னாவில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் வெட்டி அகற்றியுள்ளனர்.

நளந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர் உஷா குமாரி இது பற்றி கூறுகையில், 40 வயது ரூபா தேவி என்ற பெண் நோயாளி, வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயிற்றில் மிகப்பெரிய கட்டி ஒன்று வளர்ந்திருந்தது. சில மாதங்களாகவே அவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்து 15 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது.

தற்போது அவர் குணமடைந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் இவ்வளவு எடைகொண்ட கட்டி அகற்றப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார் மருத்துவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT