ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடியாகவே வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில், தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் போர் மூண்டுள்ளது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் ஊதியம், செலவினம், அண்மையில் அண்டை மாநிலங்களுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு தெலங்கானா பாஜக நூறுக்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை போட்ட நிலையில், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடியின் சுற்றுலாவுக்கு ஆன செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்க டிஆர்எஸ் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க | சுடப்பட்டார் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே - செய்திப் படங்கள்
அதாவது, பிரதமர் மோடி அலுவலகம் மற்றும் மத்திய நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளிவிவகாரத்துறை மற்றும் இதர முக்கிய மத்திய அமைச்சகங்களிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆன தொகை மட்டுமல்லாமல், அவரது ஆடைகளுக்கு செலவிடப்பட்ட தொகையையும் கணக்குக் கேட்டுள்ளது டிஆர்எஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.