இந்தியா

இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது: அமித் ஷா

DIN

புது தில்லி: உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  நிகழ்ச்சியொன்றில் மேலும் பேசியதாவது:

உலக நாடுகளுடம் ஒப்பிடும்போது இந்தியா பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நமது அண்டை நாடுகளில் உள்ள நிலைமையைக் காட்டிலும் இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சுரங்கத் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் விளைவாக நாட்டில் கனிமங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சுரங்க ஏலத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வந்துள்ளதுள்ளதால்,  மத்திய அரசு ஊழலுக்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது என்று அமித தா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT