இந்தியா

தில்லி: ஹோட்டலில் தீ விபத்து, 10 பேர் பத்திரமாக மீட்பு

DIN

மத்திய தில்லியின் பர்கான்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் கூறியதாவது: “மத்திய தில்லியின் பர்கான்கஞ்ச் பகுதியில் உள்ள ரோமா டீலக்ஸ் ஹோட்டலில் காலை 4.24 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. ஹோட்டலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் இருந்த 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.” என்றனர்.

ஆதித்யா (19 வயது), சன்ஷ்கிரித்தி (19 வயது), சுபம் குமார் (26 வயது), பிரதீப் (62 வயது), பினா தேவி (58 வயது), ஸ்வேதா (31 வயது), விஹான் ( 3 வயது), அர்ஜூன் (21 வயது), நித்தேஷ் (22 வயது), பார்திக் (21 வயது) ஆகியோர் ஹோட்டலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் ரித்திக் கபூர் கூறியதாவது: “இந்த விபத்து காலை 4 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நேற்று (ஜூலை 13) இரவு மின்சாரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் உள்ள அறை ஒன்றில் குளிர்விப்பானில் தொடர்ச்சியாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த அறையில் தங்கி இருந்தவர்கள் மின்கசிவு குறித்து ஹோட்டல் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் குளிர்விப்பானை இயக்கியபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயிணை அணைக்க தீயணைப்பானை வைத்து பணியாளர்கள் முயற்சி செய்துள்ளனர். ஹோட்டலில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு மாற்று ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஹோட்டலை நாங்கள் நடத்தி வருகிறோம். ஹோட்டலில் 23 அறைகள் உள்ளன. ஒரு முறை கூட இது போன்று ஏற்பட்டதில்லை.” என்றார்.

கடந்த மே 13ஆம் தேதி தில்லியின் முண்ட்கா பகுதியில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT