ஆமதாபாத்: குஜராத்தில் ஏற்கனவே சாலைகள் மோசமாக இருப்பது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி சலசலப்பை ஏற்படுத்தும். தற்போது கனமழை பெய்து வருவதால், சாலைகள் பலவும் பல்லாங்குழியாகிப்போயின.
ஒரு மாநிலத்தின் உள்கட்டமைப்பின் தரத்தை நிர்ணயிப்பதில் முதலிடம் சாலைகளுக்குத்தான். நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமல்ல, முக்கிய நகரப் பகுதிகளிலிருக்கும் சாலைகளும் தரமாக போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குஜராத் மாநிலத்தைப் பற்றி குறை கூற வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை முதலில் கையிலெடுப்பது இந்த சாலைகளைத்தான். காரணம். அதன் நிலைமைதான்.
அதற்குச் சான்று இந்த ஒரு புகைப்படம் மட்டுமல்ல.. இதுபோன்ற சாலைகளும் புகைப்படங்களும் ஏராளமாக, சமூக வலைத்தளத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன.
இதையும் படிக்க | எலான் மஸ்குக்கு எத்தனை குழந்தைகள்?
குஜராத்தில் கனமழை
குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்து பல தாழ்வானப் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துமுடங்கியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்திருப்பதால், மும்பை, டாங், கட்ச் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
பேரிடர் மீட்புப் படையினர் குஜராத் மாநிலத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.