இந்தியா

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது: ராகுல்

அதிக வரி மற்றும் வேலையின்மையால் உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை பாஜக அழித்துவருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

PTI

புது தில்லி: அதிக வரி மற்றும் வேலையின்மையால் உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை பாஜக அழித்துவருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில், 

தயிர், பன்னீர், அசிரி, கோதுமை, பார்லி, வெல்லம் மற்றும் தேன் போன்ற பொருள்களுக்கு தற்போது எப்படி வரி விதிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வகையில் வரைபடம் ஒன்றை டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். 

இதற்கு முன்னதாக நுகர்வுப் பொருள்களுக்கு வரி வசூலிக்கப்படாது. தற்போது அதிக வரிகள், ஆனால் வேலையும் இல்லை.

ஒருகாலத்தில் உலகின் வேகமாக வளர்ந்துவந்த பொருளாதாரத்தை, தற்போது எப்படி அழிப்பது என்பதே பாஜகவின் திட்டமாக இருக்கிறது. 

இதோடு, 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் மருத்துவமனைகளின் அறைகளுக்கு 5 சதவிகித வரியும், ரூ.1000-க்கு குறைவான உணவக அறைகளுக்கு 12 சதவிகித ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. 

சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், எல்இடி விளக்குகள் மற்றும் சாதாரண விளக்குகள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதற்காக காங்கிரஸ் கடுமையாகக்  கண்டிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் விபத்து: சூலூர் விமானப் படை தளத்தில் விங் கமாண்டர் உடலுக்கு அரசு மரியாதை!

தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! மற்ற மாவட்டங்களில்..?

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

SCROLL FOR NEXT