இந்தியா

அருணாச்சல் எல்லையில் 18 தொழிலாளர்களைக் காணவில்லை; ஒருவர் உடல் கண்டெடுப்பு

DIN

அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

இந்திய - சீன எல்லையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குருங் குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி 19 தொழிலாளர்களைக் காணவில்லை. 

இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஒருவரின் உடல் மட்டும் இந்திய - சீன எல்லையையொட்டிய தமின் பகுதியில் புராக் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்றும் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட கடந்த ஜூலை 5 ஆம் தேதி அவர்கள் பணியிடத்தைவிட்டுச் சென்றதாகவும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT