இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை 3-வது நாளாக முடக்கம்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை மூன்றாவது நாளாக முடங்கியது.

DIN

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை மூன்றாவது நாளாக முடங்கியது.

மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், முதல் இரண்டு நாள் கூட்டம் முடங்கியது.

இந்நிலையில், இன்று காலை அவைகள் கூடியவுடன் விலை உயர்வு குறித்து விவாதிக்க மீண்டும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, அத்தியாவசியப் பொருள்களை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.

இதையடுத்து இரு அவைகளும் பிற்பகல் 2 வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் பிற்பகலில் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்ந்ததால் நாளை காலை 11 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைச்சா் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: சொத்து, முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்- அமலாக்கத் துறை தகவல்

அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அலிகா் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி வினோத்சந்திரன் விலகல்

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

பாகிஸ்தான்: மேலும் 2 பேருக்கு போலியோ

SCROLL FOR NEXT