தலைநகரான தில்லியில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர் என்றும், உள்ளூரிலேயே இருந்தவர் எனவும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நாட்டில் முதல்முறையாக கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக தில்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 31 வயதான நபர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர். வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உள்ளூரிலேயே ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அவர் தில்லியிலுள்ள மெளலானா ஆசாத் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காய்ச்சலும், உடலில் புண்களும் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கேரளத்தில் 3 பேர், தில்லியில் ஒருவர் என 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.