முகப்பு
இந்தியா

சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை: நாளையும் ஆஜராக உத்தரவு

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நிறைவு பெற்றது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
கோப்புப் படம்
பகிர்:

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நிறைவு பெற்றது. 

காலை மற்றும் பிற்பகல் என 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், நாளையும் ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன் இரண்டாவது முறையாக இன்று ஆஜரானார். 

கடந்த 21-ஆம் தேதி சோனியா காந்தியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக இன்று விசாரணை நடைபெற்றது.

காலையில் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் தொடங்கிய விசாரணை 3 மணிநேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளையும் அலமாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக சோனியா காந்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →