இந்தியா

தெலங்கானாவில் தொடரும் கனமழை: அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை

DIN

தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநில அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் கூறுகையில், 

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. 

தில்லி சென்றுள்ள முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், மாநிலத்தில் பெய்துவரும் கனமழையைக் கவனித்து வருவதாகக் கூறினார். 

ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஹிமாயத் சாகர் மற்றும் ஒஸ்மான் சாகர் ஆகிய இரு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 

திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால், மூசி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மூசரம்பாக் பாலம் ஏற்கெனவே வெள்ளத்தில் மூழ்கி வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள பாலங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் விழிப்பாக இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் அவர் கேட்டுக் கொண்டார். 

மேலும், உயிர்ச் சேதம் ஏற்படாமல் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT