இந்தியா

50% விமானங்களை மட்டுமே இயக்க அனுமதி: ஸ்பைஸ்ஜெட்டுக்கு கட்டுப்பாடுகள்

DIN


ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகித விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவதாக எழுந்த புகாரத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வழங்கிய காரணங்களுக்கான அறிக்கை அடிப்படையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனால் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகித விமானங்களை மட்டுமே இயக்க அறிவுறுத்தப்படுகிறது. 

விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பாதுகாப்பு வழங்குவதற்கும் போதுமான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அம்சங்கள் உள்ளதை விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 18 நாள்களில் மட்டும் 8 முறை கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT